search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாஸ்பேட்டை கொள்ளை"

    லாஸ்பேட்டையில் பூட்டி இருந்த டாக்டர் வீட்டின் கதவை உடைத்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை தாகூர்நகர் 8-வது குறுக்கு தெருவில் வாடகை வீட்டில் கீழ்தளத்தில் வசித்து வருபவர் ரகுராமன் (வயது38). இவர் சென்னையில் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா (35) இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    பள்ளி அரையாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சங்கீதா வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். இன்று காலை சங்கீதா வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கிரீல்கேட் கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன்நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    யாரோ மர்ம நபர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதை நோட்டமிட்டு கிரீல்கேட் பூட்டுகளை உடைத்து இரும்பு கம்பியால் கதவை நெம்பி திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 4 லட்சமாகும்.

    இதுகுறித்து சங்கீதா சென்னையில் உள்ள தனது கணவர் ரகுராமனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரகுராமன் விரைந்து வந்து லாஸ்பேட்டை புறக்காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன், ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    எப்போதும் மக்கள் நடமாட்டமுள்ள இப்பகுதியில் மேலும் கொள்ளை நடந்த வீட்டின் மாடியில் மற்றொருவர் குடியிருக்கும் வேளையில் துணிகரமாக மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் கூறும் போது:-

    கடந்த 8 மாதமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. போலீசாரின் தீவிர ரோந்து பணிகளுக்கு மத்தியில் தற்போது இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு செல்லும் முன்பு நகை-பணத்தை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்து செல்ல வேண்டும். அதோடு பல நாட்கள் வெளியூர்களில் தங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், வெளியூர்களுக்கு செல்லும் முன்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும் என கூறினர்.
    லாஸ்பேட்டையில் வீடு புகுந்து நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். #Robberycase

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை கொட்டுபாளையம் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). எலக்ட்ரீசியன் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி. ஆசிரமத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    சுரேஷ் நேற்று குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்த அவர் வீட்டின் வெளிக்கதவு வாசல் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறை கதவு உடைக்கப்பட்டு பீரோ கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்க பணம், 10 பவுன் நகையை காணவில்லை.

    இதனால் பதட்டம் அடைந்த சுரேஷ் இது குறித்து கோரிமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் விரைந்து வந்து சோதனை நடத்தி நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். #Robberycase

    ×